புதன், 15 மார்ச், 2023

அயோத்தி - திரைவிமர்சனம்

                          அயோத்தி - திரைவிமர்சனம்


இதுவரை நான் எந்த திரைப்படம் குறித்தும் சிலாகித்து விமர்சனம் எழுதியதே இல்லை. ஆனால் இந்தப் படத்தை போற்றி புகழ்ந்து எழுதாமல் கடந்து செல்ல இயலவில்லை.


கதையை சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு சாமானியன் அவனது  சொந்த ஊரில்  மொழி மற்றும் இனத்தால் மாறுபட்ட பல மைல் தொலைவிற்கு அப்பால்(அயோத்தியில்) இருந்து  வந்திருக்கும்  குடும்பத்திற்கு செய்ய முற்படும் உதவியே கதைக்களம் ஆகும்.


சண்டை காட்சிகள் கிடையாது, குத்து பாடல்கள் கிடையாது, இரட்டை அர்த்த நகைச்சுவைகள் கிடையாது. ஆனால் குடும்ப வன்முறையின்  கோரமுகம், மத நல்லிணக்கத்தின் அவசியம், சட்டங்கள் சாமானியனுக்கு தரும் கஷ்டம், பெரிய மனிதர்களை விட எளிய மனிதர்களுக்கு பிறர்  துன்பத்தில் இருக்கும் கரிசனம் இவற்றை மிக எதார்த்தமாக எந்தவித போதனை வசனங்களும் இல்லாமல் கதையின் போக்குலேயே மிக எதார்த்தமாக பதிவு செய்துள்ளார்கள்.


மிகக் குறிப்பிட்டு ஒரு காட்சியை குறிப்பிடுவதானால். வெளியூரில் இருந்து வந்திருப்பவர் கதாநாயகனிடம் "டுமாரோ நேம் கியா ஹே?" (உனது பெயர் என்ன?) என்று கேட்கும் கேள்வியும் அதற்கு கதாநாயகன் குறிப்பிடும் பதில் நிச்சயம் உங்கள் மனதை  தொடாமல் இருக்க வாய்ப்புல்லை.


இது போன்ற நல்ல படைப்புகள் நமது மொழியில் உருவாக வேண்டும். தயவு கூர்ந்து உங்கள் ஆதரவை இந்த திரைப்படத்திற்கு வழங்குங்கள். தியேட்டருக்கு சென்று படத்தை பாருங்கள்.


குறிப்பு: படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டை தெரிவிக்க அவரது விவரங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். யாருக்காவது தெரியமெனில் தயவு கூர்ந்து தெரிவிக்கவும்.


அன்புடன்

முரளிதர்.ச

வழக்கறிஞர்

அறம் செழிக்கட்டும் அனைவரும் வாழட்டும்

வியாழன், 15 ஏப்ரல், 2021

தாய்மையே கடவுள்

அவள் பூக்கும்போதே

பெண்ணாகிறாள்.


தன் கணவனுடன் 

கையை கோர்க்கும் 

போதே  முழுமதி

என்னும் ‌திருமதி

ஆகிறாள்.


தன் சிசுவை

சுமக்கும் போதே

தாயாகிறாள்.


ஆனால் தாய்மையால்

குழந்தையை காக்கும்

போதே கடவுள் 

ஆகிறாள்.


காப்பதே கடவுளெனில்

தாய்மையே கடவுள்.